மலேசியாவில் இந்திய இசை நிகழ்ச்சிகள் அதிகமான வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை ஈர்க்கின்றன

மலேசியாவில் இந்திய இசை நிகழ்ச்சிகள் அதிகமான வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை ஈர்க்கின்றன

1 mins read
6a5ae9f1-ebd4-4d39-8ec0-088a6befcdc9
படம்: இணையம் -

மலேசியாவில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் இந்திய இசை நிகழ்ச்சிகள் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை ஈர்க்க உதவுகின்றன. மலேசியாவில் அண்மை காலத்தில் பல புகழ்பெற்ற இந்தியாவைச் சேர்ந்த இசையமைப்பாளர்கள் இசை நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றனர். ஏ.ஆர். ரஹ்மான், அனிருத், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் மலேசியாவில் இசை நிகழ்ச்சிகளை அண்மையில் நடத்தினர். அந்த வரிசையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் அங்கு கூடியவிரைவில் இசை நிகழ்ச்சி அரங்கேற்றவுள்ளார்.

அந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட 13,000 பேரை ஈர்க்கும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இதில் சுமார் 2,000 பேர் சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளிலிருந்து கலந்துகொள்வர் என நம்பப்படுகிறது.

சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சி மார்ச் 18ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெறும். அவர் இசையமைத்த 'கபாலி' திரைப்படம் மலேசியாவில் படம்பிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.