மலேசியாவில் இந்தியர்மீது சக நாட்டவரைக் கொன்றதாகக் குற்றச்சாட்டு

மலேசியாவில் இந்தியர்மீது சக நாட்டவரைக் கொன்றதாகக் குற்றச்சாட்டு

1 mins read
92a53e55-2f13-4055-acb9-443ed991b20e
கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள எஸ். தங்கராஜு, 53. - படம்: பெர்னாமா
Google News Preferred Icon

கோலாலம்பூர்: இந்தியர் ஒருவர்மீது சக நாட்டவர் ஒருவரைக் கொன்றதாக மலேசியாவில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

வீடற்றவரான எஸ் தங்கராஜு, 53, என்ற அந்த ஆடவர், மார்ச் 17ஆம் தேதி இரவு 11.45 மணியளவில் கெப்போங்கில் உள்ள ஜாலான் லாங் குனிங்கில் பழனி என்ற 60 வயது ஆடவரைக் கொன்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தண்டனைச் சட்டப் பிரிவு 302ன்கீழ் தங்கராஜுமீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனால், அவர் கொலை செய்தது உறுதிப்படுத்தப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

குற்றவியல் நடுவர் அய்னா அஸாரா அரிஃபின் முன்னிலையில் குற்றச்சாட்டு தமிழில் வாசிக்கப்பட்டது. அதனைப் புரிந்துகொண்டதாக தங்கராஜு தலையசைத்தார்.

கொலை வழக்குகள் உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை என்பதால் தங்கராஜிடமிருந்து வாக்குமூலம் எதுவும் பதிவுசெய்யப்படவில்லை.

இவ்வழக்கில் தங்கராஜு சார்பில் எந்த வழக்கறிஞரும் முன்னிலையாகவில்லை.

இவ்வழக்கு வரும் ஜூன் 10ஆம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாகொலைஇந்தியர்குற்றச்சாட்டுநீதிமன்றம்