துருக்கியில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கத்தில் காணாமல்போன 35 வயது இந்திய ஆடவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை அன்று இடிபாடுகளிலிருந்து விஜய் குமாரின் உடலை மீட்புப் பணியாளர்கள் மீட்டனர்.
அவர் இடது கையில் உள்ள பச்சையை கொண்டு அவருடைய குடும்பத்தினர் அவரை அடையாளம் கண்டனர்.
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விஜய் குமார், துருக்கியின் கிழக்குப் பகுதியின் மலாட்யாவில் உள்ள நான்கு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
திங்கட்கிழமை அதிகாலை நிலநடுக்கம் உலுக்கியபோது, அந்த 24 மாடி ஹோட்டலின் இரண்டாவது மாடி அறையில் குமார் உறங்கிக்கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது.
பெங்களூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த குமாரின் உடைமைகளும் கடப்பிதழும் முன்னதாக கண்டுபிடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து அவர் உயிருடன் இருக்கக்கூடும் என்று அவருடைய குடும்பம் நம்பிக்கை கொண்டிருந்தது.


