குவைத்: குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை ஈரான் படையினர் தாக்கியதில் இந்திய நாட்டைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்துவிட்டார்.
இதனை குவைத்தின் மின்சாரம் மற்றும் நீர்வள அமைச்சு தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்தது.
அந்தத் தாக்குதலில் மின்சாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு ஆலைக்குக் கணிசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதனைச் சீர்செய்ய தொழில்நுட்பக் குழு மும்முரமாகப் பணியாற்றி வருவதாகவும் அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
மாண்ட ஊழியர் அந்த ஆலையில் பணியாற்றி வந்ததாகவும் தாக்குதல் நடத்தப்பட்டபோது அருகில் இருந்த கட்டடம் ஒன்று உருக்குலைந்ததாகவும் அது விளக்கி உள்ளது.
முன்னதாக, குவைத் அனைத்துலக விமான நிலையம் மீது வானூர்தித் தாக்குதலை ஈரான் நடத்தியது. அந்தத் தாக்குதலில் யாருக்கும் காயமில்லை என்றபோதிலும் பயணிகளிடையே அச்சம் எழுந்தது. ஏராளமானோர் தங்களது பயணங்களை ரத்து செய்தனர்.

