தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எழுத்துக்கோவை போட்டியில் வென்ற இந்திய வம்சாவளி மாணவர்

1 mins read
bb88be7c-b2b2-46bb-ba1d-dcc18c6a5274
'2023 ஸ்கிரிப்ஸ் தேசிய எழுத்துக்கோவை' போட்டியின் வெற்றியாளர் தேவ் ஷா (வலமிருந்து இரண்டாவது) . உடன் (இடமிருந்து) பாட்டி வீணாபென் ஷா, தாயார் நீலம் ஷா, தந்தை தேவல் ஷா, சகோதரர் நீல் ஷா. படம்: ஏஎஃப்பி -

அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடத்தப்படும், சொற்களுக்கான எழுத்துகளைச் சரியான வரிசையில் சொல்வதற்கான 'ஸ்பெல்லிங் பீ' எனும் எழுத்துக்கோவைப் போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 14 வயது தேவ் ஷா வெற்றிபெற்றார்.

ஃபுளோரிடாவைச் சேர்ந்த தேவ் ஷா, 'psammophile' என்ற சொல்லைச் சரியாக எழுத்துக் கூட்டி உச்சரித்ததால் அவருக்கு 50,000 டாலர் (S$67,250) பரிசுப்பணம் கிடைத்தது.

மொத்தம் 11 மில்லியன் பேர் பங்கேற்ற போட்டியில் நேற்று ஜூன் 1ஆம் தேதி நடந்த இறுதிச் சுற்றுக்கு 11 மாணவர்கள் தேர்வுபெற்றனர்.

"என்னால் நம்பவே முடியவில்லை... என் கால்கள் இன்னும் நடுங்குகின்றன," என்று வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றபோது தேவ் சொன்னார். தம் மகனை எண்ணி தாம் மிகவும் பெருமைப்படுவதாகக் கூறினார் தேவின் தாயார்.

கடந்த 2019, 2021ஆம் ஆண்டு நடந்த போட்டிகளிலும் பங்கேற்ற தேவ், அவ்வாண்டுகளில் முறையே 51வது, 76வது இடங்களில் வந்தார்.

1925ஆம் ஆண்டிலிருந்து 'ஸ்பெல்லிங் பீ' போட்டி நடத்தப்பட்டு வருகிறது.