டப்ளின்: அயர்லாந்தில் இந்தியப் பெண் ஒருவர் தமது வீட்டில் மாண்டுகிடக்கக் காணப்பட்டார்.
தீபா தினமணி, 38, என்ற அப்பெண் கேரள மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்தவர். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் தமது வீட்டில் அவர் மாண்டுகிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் தொடர்பில் தீபாவின் கணவரான 41 வயது ரிஜினைக் காவல்துறை கைதுசெய்துள்ளது.
அத்தம்பதியர்க்கு ஐந்து வயதில் மகன் இருப்பதாகவும் இப்போது அவர் குடும்ப நல அதிகாரி ஒருவரின் பாதுகாப்பில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதனிடையே, தீபாவின் வீட்டை தடயவியல் துறையினர் ஆய்வுசெய்தபோது, அவரைக் கொல்லப் பயன்படுத்திய கத்தி கண்டுபிடிக்கப்பட்டது.
நண்பர்களுடன் வெளியே விளையாடச் சென்றிருந்த தீபாவின் மகன் வீடு திரும்பிய பின்னரே சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
அயர்லாந்தின் கார்க் சிட்டி நகரில் நிதிச் சேவை நிறுவனம் ஒன்றில் கணக்காளராகப் பணிபுரிந்து வந்தார் தீபா. சில மாதங்களுக்கு முன்னரே அவ்வட்டாரத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அவர் இடம்பெயர்ந்ததாகக் கூறப்பட்டது.