கோலாலம்பூர்: மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தமது தாயாரைக் கொன்றதாக மலேசியாவைச் சேர்ந்த கிறிஸ்துவ சமயப் போதகர் ஒருவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் தேதிக்கும் 26ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் 77 வயது கேத்ரின் டேனியலைக் கொலை செய்ததாக 53 வயது என். தினேஷ் மீது குற்றம் சாட்டப்பட்டது.
தாமான் ஓயுஜியில் உள்ள ஒரு வீட்டில் அந்த மூதாட்டி கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் தினேஷுக்கு மரண தண்டனை அல்லது 30லிருந்து 40 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன் குறைந்தபட்சம் 12 பிரம்படிகள் விதிக்கப்படலாம்.
தினேஷ் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டபோது அவர் சக்கரநாற்காலியில் அமர்ந்திருந்த தினேஷ், தாம் குற்றச்சாட்டைப் புரிந்துகொண்டதாககத் தெரிவித்தார்.
மூதாட்டி ஒருவரை அவரது மகன் கொன்றதாகவும் சடலம் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்ததாகவும் மலேசிய ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.
மூதாட்டியின் நெஞ்சுப்பகுதியில் காயம் ஏற்பட்டிருந்ததாக உடற்கூராய்வில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், குற்றச்சாட்டை எதிர்நோக்கும் ஆடவர் யாருடனும் பேசமாட்டார் என்றும் அவரது வீடு எப்போதும் இருளில் மூழ்கியிருக்கும் என்றும் அவரது அண்டைவீட்டுக்காரர்கள் கூறினர்.