தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தவறுதலாக குண்டுவீசிய தென்கொரிய விமானிகள் மீது குற்றச்சாட்டு

1 mins read
0ba2a71d-fa47-45b8-a794-659cebb2a4e0
இம்மாதம் 7ஆம் தேதி விமானிகள் தவறுதலாக போச்சியான் கிராமத்தின்மீது குண்டுகளை வீசியதால் சேதமடைந்த வீடுகளில் ஒன்று. - கோப்புப் படம்: இபிஏ

சோல்: தென்கொரியாவின் கடந்த வாரம் பயிற்சியின்போது கிராமத்தின்மீது தவறுதலாக குண்டுகளை வீசிய இரு விமானப் படை விமானிகள் மீது குற்றவியல் கவனக்குறைவு குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் 29 பேர் காயம் அடைந்தனர். பெரும் பொருள்சேதமும் ஏற்பட்டது.

தற்காப்பு அமைச்சின் விசாரணையாளர்கள், விமானிகள் தவறு செய்திருந்ததை உறுதிப்படுத்தினர். விமானக் கட்டமைப்புக்குள் நுழைந்து ஒருங்கிணைத்தபோது விமானிகள் செய்த பிழைகளே தற்செயலான குண்டுவெடிப்புக்கு காரணம் என்று பாதுகாப்பு அமைச்சின் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

கவனக்குறைவால் பொதுமக்களுக்கு காயம் விளைவித்ததாக விமானிகள்மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை தொடர்வதாகவும் அமைச்சு கூறியது.

உண்மையான குண்டுகளுடன் மேற்கொள்ளப்பட்ட பயிற்சியின்போது இரண்டு ஜெட் விமானங்களிலிருந்து ஆகாயத்திலிருந்து தரையை நோக்கிச் பாய்ச்சப்பட்ட எட்டு வெடிகுண்டுகள் வடகொரியாவின் எல்லை அருகே தென்கொரியாவின் போச்சியோன் கிராமத்தில் விழுந்தன.

தென்கொரிய, அமெரிக்க ராணுவங்கள் போச்சியோன் உட்பட அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு பயிற்சிகளை மேற்கொள்வது வழக்கம்.

இப்பகுதியில் ராணுவப் பிரிவுகள் குவிக்கப்படுவதால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு அபாயங்கள் மற்றும் இடையூறுகள் குறித்து குடியிருப்பாளர்கள் பல ஆண்டுகளாக புகார் அளித்து வருகின்றனர். இரண்டு விமானிகளும் விமானப் பணிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களின் விமானப் பணிச் சான்றிதழை மறுபரிசீலனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது என்று அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விபத்துக்கு விமானப்படைத் தலைவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். மேலும் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க பணி நடைமுறைகளை மறுபரிசீலனை செய்வதாக அவர் உறுதியளித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்