தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரிட்டிஷ் மன்னரைக் கட்டி அணைத்த ஆஸ்திரேலியப் பழங்குடியினப் பெரியவர்

1 mins read
880402df-2376-4c01-8800-29f4aced1e7c
ரெஃட்பர்ட் நகரில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட ஆஸ்திரேலியப் பழங்குடியினர் மன்னர் சார்ல்சை மரியாதையுடன் வரவேற்றனர். பழங்குடியினப் பெரியவர் மன்னரைக் கட்டி அணைத்தார். - படம்: படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: சிட்னியில் ஆஸ்திரேலியப் பழங்குடியினர் உரிமை இயக்கம் தொடங்கிய இடத்தில் பிரிட்டிஷ் மன்னர் சார்ல்சைப் பழங்குடியினப் பெரியவர் ஒருவர் கட்டி அணைத்தார்.

ரெட்ஃபேர்ன் எனும் நகரில் ஆஸ்திரேலியப் பழங்குடியினப் பெரியவர்களை மன்னர் சார்ல்ஸ் அக்டோபர் 22ஆம் தேதியன்று சந்தித்துப் பேசினார்.

அதற்கு முன்பு மன்னர் சார்ல்சுக்கு அவர்கள் சடங்குபூர்வ வரவேற்று அளித்தனர்.

அக்டோபர் 21ஆம் தேதியன்று, மன்னர் சார்ல்ஸ் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்துக்குச் சென்றிருந்தபோது அவரை எதிர்த்து ஆஸ்திரேலியப் பழங்குடியின சுயேச்சை செனட்டர் ஒருவர் குரல் எழுப்பினார்.

“இது உங்கள் நிலம் இல்லை. நீங்கள் எனது மன்னர் அல்ல,” என்று திருவாட்டி லீடியா தோர்ப் உரக்க கத்தினார்.

திருவாட்டி தோர்ப்பை நாடாளுமன்றப் பாதுகாவல் அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றினர்.

இந்நிலையில், ரெஃட்பர்ட் நகரில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட ஆஸ்திரேலியப் பழங்குடியினர் மன்னர் சார்ல்சை மரியாதையுடன் வரவேற்றனர்.

திருவாட்டி தோர்ப்பின் செயலுக்காக அவர்களில் சிலர் வருத்தம் தெரிவித்துக்கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்