டாக்சி ஓட்டுநர்போல் நடித்து ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவர் சுட்டுக்கொலை

டாக்சி ஓட்டுநர்போல் நடித்து ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவர் சுட்டுக்கொலை

படம்: கோலாலம்பூர் காவல்துறை/ஃபேஸ்புக்

18 Nov 2026 - 6:49 pm

1 mins read

கோலாலம்பூர்: டாக்சி ஓட்டுநர்போல் நடித்துப் பெண்களையும் மூத்த குடிமக்களையும் இலக்காகக் கொண்டு குறைந்தது 24 ஆயுதக் கொள்ளைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர், புதன்கிழமை (நவம்பர் 18) அதிகாலை கோலாலம்பூர் ஹோட்டலில் நடந்த காவல்துறைச் சோதனையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மத்திய கோலாலம்பூரின் சௌ கிட் பகுதியில் உள்ள ஹோட்டல் அறையில் அந்தச் சந்தேக நபர் பதுங்கியிருந்ததை அறிந்த கோலாலம்பூர் குற்றப் புலனாய்வுத் துறையினரும் புக்கிட் அமான் கூட்டரசுக் காவல்துறையினரும் அதிகாலை 2 மணியளவில் சோதனை நடத்தினர்.

அப்போது, சந்தேக நபர் துப்பாக்கியால் சுட்டதால், காவல்துறையினர் தற்காப்புக்காகத் திருப்பிச் சுட்டதில் அவர் உயிரிழந்ததாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் ஃபடில் மார்சுஸ் தெரிவித்தார்.

அறையிலிருந்து துப்பாக்கியும் ‘ஷாபு’ எனச் சந்தேகிக்கப்படும் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையின் மூலம் 24 கொள்ளை வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் குற்றவியல் சட்டப் பிரிவுகள் 392, 397ன்கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்