பலங்கராயா: செயற்கை மேகத்தை உருவாக்கி மழை பொழியவைத்தல், தண்ணீர் குண்டுகளைப் போடுதல் போன்ற முயற்சிகளை இந்தோனீசியா தீவிரப் படுத்திவருகிறது.
அதன்வழியாக தொடர்ந்து கடுமையாகப் பரவிவரும் காட்டுத் தீயையும் கொடிய நெடியுடன் கிளம்பியுள்ள புகைமூட்டத்தையும் கட்டுப்படுத்த அந்நாடு இருமுனைகளில் போராடி வருவதாக அதன் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28) தெரிவித்தனர்.
ஆயிரக்கணக்கான இந்தோனீசிய மக்கள் கடும் புகைமூட்டத்தில் முச்சுவிட தடுமாறி வருகின்றனர்.
போர்னியோ உட்பட சுமத்ரா தீவுகளில் ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் துர்நாற்றம் வீசும் நிலையில், பரந்த தீபகற்பத்திலிருந்து எரிந்துகொண்டிருக்கும் காட்டுத் தீயின் பகுதிகளிலிருந்து வரக்கூடிய புகை மூட்டத்தை நேரடியாக எதிர்கொண்டுள்ளனர்.
இதனை இந்தோனீசிய சுகாதாரத் துணை அமைச்சர் டன்டே சக்ஸ்சோனோ ஹர்புவனோ தெரிவித்தார். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மட்டும் மூச்சுத் திணறல் பிரச்சினைகளுக்கு 13,500பேர் சிகிச்சை பெற்றுவருவதையும் அவர் குறிப்பிட்டார்.
இந்தோனீசியாவில் பல பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் ஒருசில மக்கள் புகை மூட்டத்தால் உடல் நலமின்றி அவதிப்படுகின்றனர்.
வெளியிடங்களில் வேலை செய்வோர், பிள்ளைகள், முதியோர், கர்ப்பிணிகள், ஆஸ்துமா நோய் உள்ளோர் ஆகியோர் பாதிக்கப்படக் கூடியவர்கள் எனவும் திரு டன்டே கூறினார்.
போர்னியோ தீவின் மத்திய கலிமந்தான் தலைநகரான பலங்கராயாவில் அரசாங்க சார்பற்ற அமைப்புகள் கைக்குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் இரண்டு முகாம்களை அமைத்துள்ளன. மேலும் பலவற்றை அமைக்க அந்த அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.


