இத்தாலியிடம் விமானந்தாங்கிக் கப்பலை வாங்கும் இந்தோனீசியா

அக்டோபர் ஐந்தாம் தேதிக்குள் கப்பல் வந்தடையும்

இத்தாலியிடம் விமானந்தாங்கிக் கப்பலை வாங்கும் இந்தோனீசியா

2 mins read
சீனா, இந்தியா, ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாடுகளின் வரிசையில் ஆசியாவில் விமானந்தாங்கி கப்பலைக் கொண்ட ஐந்தாவது நாடு இந்தோனீசியா
169bdbbc-7d93-4782-94f3-58c24c74e154
ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு (நேட்டோ) நடத்திய போர் பயிற்சிகளில் பங்கேற்ற இத்தாலியின் விமானந் தாங்கிக் கப்பல் கியுசெப்பெ கரிபல்டி. - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

இவ்வாண்டு, இத்தாலியிடமிருந்து ஓர் விமானந்தாங்கிக் கப்பலை இந்தோனீசியா வாங்கவிருக்கிறது என்று அந்நாட்டு அன்டாரா செய்தி நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13) செய்தி வெளியிட்டுள்ளது.

அது இந்தோனீசியாவின் ராணுவம் பெறப்போகும் முதல் விமானந்தாங்கிக் கப்பலாகும். அதன்படி, சீனா, இந்தியா, ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாடுகளின் வரிசையில் ஆசியாவில் விமானந்தாங்கி கப்பலைக் கொண்ட ஐந்தாவது நாடாக இந்தோனீசியா அமையும்.

இத்தாலியின் விமானந் தாங்கிக் கப்பல், கியுசெப்பெ கரிபல்டி (Giuseppe Garibaldi) என்ற 19ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற ராணுவத் தளபதியின் பெயரில் 1985ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இத்தாலிய அரசாங்கம் வழங்கும் மானியத்தில் அது வாங்கப்படவுள்ளது என்று அன்டாரா இத்தாலிய தற்காப்பு அமைச்சின் பொதுத் தகவல் துறையின் தலைவர் தளபதி ரிக்கோ ரிக்கார்டோ சிரையிட்டைக் குறிப்பிட்டு விவரங்களை வெளியிட்டுள்ளது.

“அக்கப்பலுக்குத் தேவையான மாற்றங்களை இந்தோனீசியக் கடற்படை மேற்கொள்ளும். கப்பலை வாங்குவதற்கான நிதியை இந்தோனீசிய அரசாங்கம் ஒதுக்கும்,” என்று இத்தாலியத் தளபதி ரிக்கோ தெரிவித்துள்ளார்.

இருநாட்டு அரசாங்கங்களும் நிர்வாக நடைமுறைகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்திவருவதாகவும் அவர் கூறியுள்ளார். வாங்கப்படவுள்ள அந்த கப்பல், இத்தாலிய கடற்படையில் 1985ஆம் ஆண்டுமுதல் 2024ஆம் ஆண்டுவரையில் சேவையில் இருந்துள்ளது.

இந்தோனீசிய தேசிய ராணுவப் படையின் ஆண்டு நிறைவு நாளான அக்டோபர் ஐந்தாம் தேதிக்குள்ளாக கப்பல் இந்தோனீசியாவை வந்தடையும் என்று அந்நாட்டு கடற்படைத் தளபதி முஹம்மது அலி தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்