ஜகார்த்தா: பிரெஞ்சு அரசுக்குச் சொந்தமான ‘நேவல்’ குழுமத்திடமிருந்து இரண்டு ‘ஸ்கார்ப்பீன்’ நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க இந்தோனீசியா ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
இதுகுறித்த தகவலை அந்நிறுவனம் தனது இணையத்தில் செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 2) வெளியிட்டது. ஆயினும், அவ்விரு நீர்மூழ்கிக் கப்பல்களின் விலைமதிப்பு விவரம் தெரிவிக்கப்படவில்லை.
‘ஸகார்ப்பீன்’ நீர்மூழ்கிக் கப்பல் 72 மீட்டர் நீளம் கொண்டது. அவ்விரு நீர்மூழ்கிகளும் இந்தோனீசியாவிலேயே தயாரிக்கப்படும் என்று நேவல் குழுமம் தெரிவித்துள்ளது.
இந்தோனீசியா அண்மையில் மேலும் பல பிரெஞ்சு ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. கடந்த 2022ஆம் ஆண்டில் 22 ரஃபேல் போர் விமானங்களை வாங்க அது டசால்ட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டது.
இந்தோனீசியா - பிரான்ஸ் இடையிலான இந்த விரிவான தற்காப்புப் பங்காளித்துவமானது, இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் தனது நிலையை வலுப்படுத்தும் பிரான்சின் உத்தியாகப் பார்க்கப்படுகிறது.