காட்டுத்தீயால் இந்தோனீசியாவுக்கு $38.7 பி. இழப்பு ஏற்படக்கூடும்: ஆய்வு

காட்டுத்தீயால் இந்தோனீசியாவுக்கு $38.7 பி. இழப்பு ஏற்படக்கூடும்: ஆய்வு

படம்: ஏஎஃப்பி

21 Nov 2026 - 10:53 am

1 mins read

ஜகார்த்தா: இவ்வாண்டு இந்தோனீசியாவில் மூண்ட பெரிய அளவிலான காட்டுத்தீயால் அந்நாட்டுக்கு 30 பில்லியன் டாலருக்கும் (38.7 பில்லியன் வெள்ளி) அதிக மதிப்பிலான இழப்பு ஏற்படக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த ஆய்வை வழிநடத்தியவர் வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) இத்தகவலை வெளியிட்டார்.

பொருட்சேதம், பொருளியல் நடவடிக்கைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு ஆகியவற்றால் மட்டுமே கிட்டத்தட்ட 340 டிரில்லியன் ரூப்பியா (24 பில்லியன் வெள்ளி) இழப்பு ஏற்படக்கூடும் என்று இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் செயல்படும் பொருளியல், சட்டக் கல்வி நிலையம் (சீலியோஸ்) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இத்தொகை, இந்தோனீசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 2.69 விழுக்காட்டுப் பங்குக்குச் சமமாகும் என்று சீலியோஸ் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்