கிறிஸ்துமஸ் விழா; கைதிகளின் தண்டனையை ரத்து செய்த இந்தோனீசியா

1 mins read
910ac384-9f6d-464d-9236-778114455ac9
கிறிஸ்துமஸ் காலத்தை முன்னிட்டு குற்றச்செயல் புரிந்ததற்காகச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் 16,078 பேரின் தண்டனையைத் தள்ளுபடி செய்துள்ளது இந்தோனீசிய அரசாங்கம். - கோப்புப் படம்: எஸ்பிஎச்

ஜகார்த்தா: ஊழல் குற்றவாளிகள் உட்பட 16,000க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு கிறிஸ்துமஸ் காலத்தை முன்னிட்டு மன்னிப்பு வழங்குவதாகக் கூறியுள்ளது இந்தோனீசியா.

அந்நாட்டு அரசாங்கம், குற்றச்செயல் புரிந்ததற்காகச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சிறார் உட்பட 16,078 பேரின் தண்டனையைத் தள்ளுபடி செய்துள்ளது.

இந்த சிறப்புத் தண்டனைக் குறைப்பு நடவடிக்கைகள் 9.47 பில்லியன் மதிப்பிலான அரசுச் செலவினங்களைக் குறைத்து நிதிச் சேமிப்பிற்கு வழிவகுக்கும் என்று அந்நாட்டுல் குடிநுழைவு மற்றும் சீர்திருத்த அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேற்கூறிய நடவடிக்கைகள் வாயிலாகத் தண்டனைக் காலத் தள்ளுபடி பெற்ற கைதிகளில் 174 பேர் உடனடியாக விடுவிக்கப்பட்டனர். மேலும் 15,904 பேரின் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்