தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மோசடிக் கும்பலிடம் சிக்கிய 561 இந்தோனீசியர்கள் நாடு திரும்புகின்றனர்

1 mins read
6dd2a6ad-85fc-4b20-9c8b-6dcdd5c24b03
மார்ச் 18ல் 400 இந்தோனீசியர்கள் நாடு திரும்புவர் என்று தெரிவிக்கப்பட்டது. ஏறத்தாழ 161 இந்தோனீசியர்கள் புதன்கிழமை (மார்ச் 19) நாடு திரும்ப இருப்பதாக இந்தோனீசிய வெளியுறவு அமைச்சு, ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறியது. இவர்கள் அனைவரும் மியன்மாரில் உள்ள மோசடி நிலையங்களிலிருந்து மீட்கப்பட்ட ஊழியர்கள். - படம்: ஏஎஃப்பி

ஜகார்த்தா: மியன்மாரில் மோசடிக் கும்பல்கள் நடத்திய இணையம் வழி மோசடி நிலையங்களிலிருந்து மீட்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட இந்தோனீசியர்கள் சொந்த நாடு திரும்ப இருக்கின்றனர்.

மியன்மாரிலிருந்து தாய்லாந்து வழியாக அவர்கள் இந்தோனீசியா வந்தடைவர் என்று மூத்த இந்தோனீசிய அதிகாரி செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) தெரிவித்தார்.

கடந்த பல ஆண்டுகளாக மியன்மாரின் எல்லைப் பகுதிகளிலிருந்து இதுபோன்ற இணையம் வழி மோசடிக் குற்றங்கள் நடத்தப்பட்டன.

உயர் சம்பளம் தருவதாகப் பொய் கூறி வெளிநாட்டு ஊழியர்கள் ஈர்க்கப்பட்டனர்.

வேலையில் சேரும் நோக்குடன் அங்கு சென்றடைந்த வெளிநாட்டினர் அடைத்து வைக்கப்பட்டு இணையம் வழி மோசடிக் குற்றங்களைப் புரிய பலவந்தப்படுத்தப்பட்டனர்.

அண்மை வாரங்களில், குறைந்தது 24 நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ 7,000 ஊழியர்கள் விடுவிக்கப்பட்டனர்.

அவர்களில் பெரும்பாலானோர் சீனாவைச் சேர்ந்தவர்கள்.

மியன்மாருக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான எல்லைப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த பல இணையம் வழி மோசடி நிலையங்களில் இந்த வெளிநாட்டு ஊழியர்கள் சிக்கித் தவித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

இந்நிலையில், மார்ச் 18ல் 400 இந்தோனீசியர்கள் நாடு திரும்புவர் என்று தெரிவிக்கப்பட்டது.

ஏறத்தாழ 161 இந்தோனீசியர்கள் புதன்கிழமை (மார்ச் 19) நாடு திரும்ப இருப்பதாக இந்தோனீசிய வெளியுறவு அமைச்சு, ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறியது.

இவர்கள் அனைவரும் மியன்மாரில் உள்ள மோசடி நிலையங்களிலிருந்து மீட்கப்பட்ட ஊழியர்கள்.

குறிப்புச் சொற்கள்