தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தோனீசியா: இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய மாணவர்களை மீட்கும் பணி தொடர்கிறது

1 mins read
5d6185e2-7691-4233-8e1d-623d658b44d6
இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய மாணவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

கிழக்கு ஜாவா: இந்தோனீசியாவின் கிழக்கு ஜாவா மாநிலத்தில் சில நாள்களுக்கு முன்னர் பள்ளிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது.

அதில் 60க்கும் மேற்பட்ட பிள்ளைகள் சிக்கிக்கொண்டனர்.

இந்நிலையில், இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய மாணவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இடிந்து விழுந்த கட்டடத்திற்கு வெளியே வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) 10க்கும் மேற்பட்ட அவசர உதவி வாகனங்கள் தயார் நிலையில் இருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

செப்டம்பர் 29ஆம் தேதி சிடோர்ஜோ பகுதியில் உள்ள அல் கோசினி இஸ்லாமியப் பள்ளியில் பிற்பகல் நேரத்திற்கான வழிபாடு நடந்துகொண்டிருந்தபோது கட்டடம் இடிந்து விழுந்தது.

கட்டடம் இடிந்தபோது அதில் 100க்கும் அதிகமான மாணவர்கள் இருந்தனர்.

அந்தக் கட்டடத்தின் மேல்தளங்களில் கட்டடப் பணிகள் நடந்துகொண்டிருந்தபோது கீழ்த்தளத்தில் பாரம் தாங்காமல் கட்டடம் சரிந்தது.

கட்டடத்தில் சிக்கிய பெரும்பாலான மாணவர்களின் வயது 13 முதல் 19 என்று தெரிவிக்கப்பட்டது.

வியாழக்கிழமை (அக்டோபர் 2) ஐந்து பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. தற்போது 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்