16 மாதக் குழந்தையின் எடை 27 கிலோ; எடை குறைக்க உதவும் அரசாங்கம்

1 mins read
31a4b844-0082-4ae7-b26c-168868a8eb55
படம்: டிவிட்டர் -

இந்தோனீசியாவின் மேற்கு ஜாவாவில் 16 மாதக் குழந்தை ஒன்று பிரபலமாகி வருகிறது.

முகம்மது கென்சி அல்பாரோ என்னும் இந்த ஆண் குழந்தையின் எடை 27 கிலோ.

பிறந்தபோது முகம்மதின் எடை 4 கிலோவாக இருந்த நிலையில், ஆறு மாதங்களுக்குப் பிறகு உடல் எடைகூடத் தொடங்கியதாக அவனது பெற்றோர் கூறினர்.

தன் அப்பாவின் உடையையே முகம்மதும் அணிகிறான். அவனது அணையாடையின் (diaper) அளவு XXXL .

கிட்டத்தட்ட 8 வயதுச் சிறுவனின் எடைக்கு நிகராக உள்ள முகம்மது குறித்த காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

முகம்மதைத் தூக்க முடியாமல் திணறும் பெற்றோர், அவனைத் தள்ளுவண்டி மூலம் பிற இடங்களுக்குக் கொண்டு செல்கின்றனர்.

வருவாய்ப் பற்றாக்குறை காரணமாக இரவு நேரங்களில் மட்டும் தான் முகம்மதிற்கு அணையாடை அணிவிப்பதாக அவனது தாய் பிட்ரியா, 40, தெரிவித்தார்.

முகம்மதின் நிலையைக் கண்ட இந்தோனீசிய அரசாங்கம், அவனது மருத்துவச் செலவையும் எடைக் குறைப்பு நடவடிக்கைக்கான செலவுகளையும் ஏற்றுக்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
குழந்தை