கர்ப்பிணி மனைவியைக் கரும்புத் தோட்டத்தில் தவிக்கவிட்டுக் கொன்ற சந்தேகத்தில் ஆடவர் கைது

1 mins read
8b58ac67-0c2a-4c7e-b6df-543dd79a96a2
படம்: Unsplash -

இந்தோனீசியாவில் கர்ப்பிணி மனைவியைக் கரும்புத் தோட்டத்தில் தவிக்கவிட்டுக் கொன்ற சந்தேகத்தில் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் மார்ச் 26ஆம் தேதி நடந்ததாக அதிகாரிகள் கூறினர்.

கிழக்கு ஜாவாவில் உள்ள கெடிரி பகுதிக்கு தம்மை அழைத்து செல்லுமாறு மனைவி தனது கணவரிடம் மார்ச் 26ஆம் தேதி கேட்டுள்ளார்.

இருவரும் அன்று மோட்டர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது மனைவிக்கும் கணவருக்கு இடையே வாக்குவாதம் முற்றியது.

வாகனத்தின் வேகத்தைக் குறைக்கும் படி மனைவி கூறியுள்ளார். ஆனால் ஆடவர் கேட்கவில்லை. சில நிமிடங்களுக்குப் பிறகு அந்த பெண் கீழே விழுந்து சுயநினைவை இழந்துள்ளார்.

மனைவியை மீண்டும் வாகனத்தில் ஏற்றிச் சென்றார் ஆடவர். ஆனால் அப்பெண் இரண்டாவது முறையாகவும் கீழே விழுந்தார். ஆடவர் அப்பெண்ணை மீண்டும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பயணத்தை தொடர்ந்துள்ளார்.

ஒருகட்டத்தில் ஆடவர் மனைவியை செல்லும் வழியில் இருந்த ஒரு கரும்புத் தோட்டத்திலேயே விட்டுச் சென்றதாக நம்பப்படுகிறது.

மூன்று நாள்களுக்குப் பிறகு அந்த பெண் தோட்டத்தில் மாண்டுகிடக்க காணப்பட்டார்.

சில ஊடகங்கள் அந்த பெண் தமது குழந்தையை ஈன்றெடுத்ததாகவும் குழந்தையும் அங்கேயே மாண்டதாகவும் கூறுகின்றன.

மனைவியைத் தோட்டத்திலேயே விட்டுச்சென்றதை ஆடவர் ஒப்புக்கொண்டார். அவர் மீது அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்