ரூப்பியாவின் மதிப்பு சரிவு

ரூப்பியாவின் மதிப்பு சரிவு

1 mins read
3108dbf3-a5d1-4cdb-8965-643ed02975bd
செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) காலை 11.46 மணி நிலவரப்படி ஒரு சிங்கப்பூர் வெள்ளிக்கு ரூப்பியாவின் மதிப்பு 12,415.58. - படம்: ராய்ட்டர்ஸ்

ஜகார்த்தா: ஆசிய நிதி நெருக்கடிநிலைக்குப் பிறகு, இந்தோனீசியாவின் நாணயமான ரூப்பியா அதிகளவில் பலவீனமடைந்துள்ளது.

அதன் மதிப்பு பேரளவில் சரிந்துள்ளது.

இதன் காரணமாக இந்தோனீசிய மத்திய வங்கிக்கு நெருக்குதல் ஏற்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 25) ரூப்பியாவின் மதிப்பு 0.5 விழுக்காடு குறைந்தது.

ஓர் அமெரிக்க டாலருக்கு 16,642 ரூப்பியா எனும் நிலை எட்டப்பட்டுள்ளது.

1998ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பிறகு இதுவே ரூப்பியாவின் ஆகப் பலவீனமான நிலை.

2025ஆம் ஆண்டில் ரூப்பியா மூன்று விழுக்காடு சரிந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) மாலை 4.45 மணி நிலவரப்படி ஒரு சிங்கப்பூர் வெள்ளிக்கு ரூப்பியாவின் மதிப்பு 12,398.16.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்