குப்பைத் தொட்டியில் சிசுவின் உடல்: மலேசிய இளம் தம்பதி கைது

குப்பைத் தொட்டியில் சிசுவின் உடல்: மலேசிய இளம் தம்பதி கைது

1 mins read
ad8faa45-9dfa-4b61-ada8-17d942073498
குற்றத்தை ஒப்புக்கொண்ட தம்பதியினர், ஜூன் மாதம் 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நான்கு நாள்களுக்கு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் - படம்: பிக்சாபே

கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பெர்செபாடு சிலாத்தான் பேருந்து முனையத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள பெண்கள் கழிவறையில், கடந்த வாரம் ஆண் சிசு ஒன்றின் உடல் கண்டெடுக்கப்பட்டது. நீல நிற நெகிழிப் பையில் சுற்றப்பட்ட நிலையில் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டிருந்த அந்தச் சிசுவின் உடல் குறித்து, ஜூன் மாதம் 9ஆம் தேதியன்று பேருந்து முனைய நிர்வாகம் காவல்துறைக்குத் தகவல் அளித்தது.

இதுதொடர்பான தீவிர புலனாய்வுக்குப் பிறகு, இளம் தம்பதியைச் செப்பாங் பகுதியில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இருவரும் வேலையில்லாத 21 வயது இளையர்கள். முதற்கட்ட விசாரணையில், கழிவறையிலேயே அந்தப் பெண் சிசுவை ஈன்றெடுத்ததும் குடும்பத்தினரின் கண்டிப்புக்கு பயந்து அதன் உடலைக் குப்பைத் தொட்டியில் வீசியதும் தெரியவந்துள்ளது.

குற்றத்தை ஒப்புக்கொண்ட அந்தத் தம்பதியினர், ஜூன் மாதம் 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நான்கு நாள்களுக்கு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பிறப்பை மறைத்து உடலை ரகசியமாக அப்புறப்படுத்திய குற்றத்திற்காக இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாகுப்பைகைதுதம்பதி