தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கால் உடைந்த பசுவை ஹெலிகாப்டர் மூலம் காப்பாற்றிய அதிகாரிகள்

1 mins read
73c0bc98-8442-4011-9e50-2ffa33342dfe
படம்: சமூக ஊடகம் -

சுவிட்சர்லாந்தில் காயமடைந்த பசு ஒன்றை ஹெலிகாப்டர் மூலம் அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர்.

சம்பவம் மே 26ஆம் தேதி எவோலீம் என்னும் பகுதியில் நடந்தது.

பசுவிற்கு காலில் முறிவு ஏற்பட்டதால் அதற்கு சிகிச்சை அளிக்க ஹெலிகாப்டர் தேவைப்பட்டதாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

அது தொடர்பான காணொளியையும் அவர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.

இரண்டு வயதான அந்த மாட்டிற்கு 'காடஸ்' அதாவது பெண் கடவுள் என்று பெயரிட்டுள்ளார் அதன் உரிமையாளர்.

பசுவின் காலில் முறிவு ஏற்பட்டதால் நடக்க முடியாமல் அது தவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பசு மற்றொரு மாடுடன் சண்டையிட்டதால் அதன் காலில் முறிவு ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்