குழந்தை மரணம், மாயமான சிறார் குறித்து ஜோகூர் ஆடவரிடம் விசாரணை

குழந்தை மரணம், மாயமான சிறார் குறித்து ஜோகூர் ஆடவரிடம் விசாரணை

1 mins read
a53ac061-9ca0-46cd-b1be-70e488b68f85
குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் உயிருடனோ அல்லது பிணமாகவோ மீட்கப்படாததால் கொலை வழக்கு இன்னும் பதிவு செய்யவில்லை என்று ஜோகூர் காவல்துறைத் தலைவர் ரஹ்மான் அர்ஷாட் கூறினார். இந்த வழக்குக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார். - படம்: எஸ்பிஎச் மீடியா

கோலாலம்பூர்: இரண்டு குழந்தைகளின் மரணம், சிறுவர்கள் இருவர்கள் மாயமானது ஆகியவை தொடர்பாக ஜோகூர் ஆடவர் ஒருவருக்குத் தொடர்பு இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதுகுறித்து, மலேசியக் காவல்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சந்தேக நபருக்குச் சொந்தமான தொழில்நுட்பச் சாதனங்களிலிருந்து 18 மாதத்துக்கும் குறைவான குழந்தை உட்பட சிறுவர்கள் துன்புறுத்தப்படுவதைக் காட்டும் காணொளிகளை அதிகாரிகள் கண்டெடுத்ததாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது.

இரண்டு குழந்தைகள் மாண்டுவிட்டதாக அஞ்சப்படுகிறது. ஆனால் அவற்றின் உடல்கள் கண்டெடுக்கப்படவில்லை. இந்த வழக்குடன் தொடர்புடைய இரு சிறுவர்களை இன்னும் காணவில்லை.

குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் உயிருடனோ அல்லது சடலமாகவோ மீட்கப்படாததால் கொலை வழக்கு இன்னும் பதிவு செய்யவில்லை என்று ஜோகூர் காவல்துறைத் தலைவர் ரஹ்மான் அர்ஷாட் கூறினார்.

இந்த வழக்கிற்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் ஆஸ்‌திரேலியாவிடமிருந்து பெறப்பட்ட புதிய மின் தடயவியல் கருவிகள் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையம் மூலம் சிறுவர்களைத் துன்புறுத்தும் கும்பல்களை முறியடிக்கும் பணியில் மலேசியாவும் ஆஸ்திரேலியாவும் இணைந்து செயல்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்த மின் தடயவியல் கருவி மலேசியாவுக்குத் தரப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்