அனைத்துலக எரிசக்தி முதலீடு சாதனை அளவாக $3.3 டிரில்லியனை எட்டக்கூடும்

2 mins read
a6616b38-9758-44b6-817a-95d36f48c5d2
தைவானின் சங்குவாவில் உள்ள காற்றாலை, சூரியச்சக்தி தகடுகள். - படம்: ராய்ட்டர்ஸ்

பாரிஸ் - பசுமை எரிசக்திக்கான உயரும் செலவுகளால் இவ்வாண்டுக்கான அனைத்துலக எரிசக்தி முதலீடு சாதனை அளவாக $3.3 டிரில்லியன் டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிச்சயமற்ற பொருளியல் சூழலையும் புவிசார் அரசியல் பதற்றங்களையும் தாண்டி அந்தத் தொகை முதலீடு செய்யப்படக்கூடும் என்று அனைத்துலக எரிசக்தி அமைப்பு (ஐஇஏ) வியாழக்கிழமை (ஜூன் 4) தெரிவித்தது.

இயற்கை, அணுசக்தி, எரிசக்திச் சேமிப்பு உள்ளிட்ட பசுமை எரிசக்தித் தொழில்நுட்பங்கள் $2.2 டிரில்லியன் முதலீட்டை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அது படிம எரிபொருளுக்கான முதலீட்டைவிட இரண்டு மடங்கு அதிகம் என்று ஐஇஎ அதன் வருடாந்தர உலக எரிசக்தி முதலீட்டு அறிக்கையில் தெரிவித்தது.

சூரியசக்தித் துறை ஆக அதிகளவில் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாண்டு அதில் செய்யப்படும் முதலீடு $450 பில்லியனை எட்டும் கூறப்பட்டது.

இயற்கை எரிசக்தியை பேட்டரிகளில் சேமித்துவைக்கும் கட்டமைப்புக்கான முதலீடு $66 பில்லியன் டாலரை எட்டும் என்கிறது அறிக்கை.

எதிர்மறையாக, எண்ணெய்யிலும் எரிவாயுவிலும் முதலீடு சரியும் என்று கணிக்கப்படுகிறது.

மின்சார விநியோகக் கட்டமைப்பில் ஒவ்வோர் ஆண்டும் செய்யப்படும் $400 பில்லியன் டாலர், உற்பத்தியில் செய்யப்படும் செலவினங்களைவிட குறைவாக இருக்கக்கூடும் என்று ஐஇஎ எச்சரித்தது. அது மின்சாரப் பாதுகாப்புக்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்கக்கூடும் என்றும் கூறப்பட்டது.

மின்சாரப் பாதுகாப்பை உறுதிசெய்ய 2030ஆம் ஆண்டு தொடக்கத்துக்குள் மின்சாரக் கட்டமைப்புகளுக்கான முதலீடுகள் உற்பத்திச் செலவுகளுக்கு ஏற்ப உயரவேண்டும் என்று ஐஇஎ சொன்னது.

எரிசக்தி கட்டமைப்புக்கான முதலீட்டைப் பெற வளர்ந்துவரும் பொருளாதாரங்கள் சிரமப்படுவதால் உலக அளவில் செலவுகள் சமமாக இல்லை என்று அமைப்பு மேலும் குறிப்பிட்டது.

- படம்: ஏஎஃப்பி
குறிப்புச் சொற்கள்