ர‌ஷ்ய மீதான தடையை நீக்கிய அனைத்துலக ஒலிம்பிக் மன்றம்

ர‌ஷ்ய மீதான தடையை நீக்கிய அனைத்துலக ஒலிம்பிக் மன்றம்

1 mins read
56637985-109f-46e0-af7a-986e00567540
அனைத்துலக ஒலிம்பிக் மன்றத் தலைவர் கிறிஸ்டி. - படம்: ராய்ட்டர்ஸ்

மாஸ்கோ: அனைத்துலக ஒலிம்பிக் மன்றம் ர‌ஷ்ய ஒலிம்பிக் மன்றத்தின் மீதான தடையை நீக்கியுள்ளது.

இந்த நடவடிக்கை மூலம் 2028ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் ர‌ஷ்ய விளையாட்டாளர்கள் கலந்துகொள்ள முடியும்.

2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ர‌ஷ்யா உக்ரேன்மீது படை எடுத்தது. அதையடுத்து 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அனைத்துலக ஒலிம்பிக் மன்றம் ர‌ஷ்ய ஒலிம்பிக் மன்றத்தின் மீது தடை விதித்தது.

தடை நீக்கப்பட்டாலும் எதிர்வரும் ஒலிம்பிக் போட்டியில் ர‌ஷ்ய நாட்டுக் கொடியை வீரர்கள் ஏந்தி வரலாமா, ர‌ஷ்யாவின் தேசிய கீதம் ஒலிக்குமா என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

குறிப்புச் சொற்கள்