கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடனான புதிய மலேசியக் கடப்பிதழ் அறிமுகம் ஒத்திவைப்பு

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடனான புதிய மலேசியக் கடப்பிதழ் அறிமுகம் ஒத்திவைப்பு

1 mins read
e85a92e0-8a3a-4fbe-b923-1bed7659fb26
புதிய கடப்பிதழ் அறிமுகம் மற்றொரு தேதிக்கு மாற்றியமைக்கப்படுவதாகவும் அதற்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் மலேசியக் குடிநுழைவுத் துறை கூறியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புத்ராஜெயா: கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் ஜூன் 1ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவிருந்த புதிய மலேசியக் கடப்பிதழ் வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக மலேசியக் குடிநுழைவுத் துறை செவ்வாய்க்கிழமையன்று (மே 26) அறிவித்துள்ளது.

புதிய கடப்பிதழ் அறிமுகம் மற்றொரு தேதிக்கு மாற்றியமைக்கப்படுவதாகவும் அதற்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் குடிநுழைவுத் துறை கூறியது.

பொதுமக்கள் தங்களது பயண ஆவணங்களைப் பெறும்போது எவ்வித இடையூறுகளும் இன்றி, சீரான, சிறந்த சேவையை உறுதி செய்வதற்காகவே இந்த ஒத்திவைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் துறை விளக்கம் அளித்துள்ளது.

இடைப்பட்ட காலத்தில், பொதுமக்கள் தங்களது தற்போதைய கடப்பிதழ்களை வழக்கம்போல் புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் தற்போது பயன்பாட்டில் உள்ள செல்லுபடியாகும் கடப்பிதழ்களைக் கொண்டு காலாவதி தேதி வரை தாராளமாகப் பயணம் செய்யலாம் என்றும் அமைச்சு உறுதிபடுத்தியுள்ளது.

புதிய கடப்பிதழ் அமலாக்கம் குறித்த அடுத்தகட்டத் தகவல்கள் அதிகாரபூர்வ ஊடகங்கள் வழியாக அவ்வப்போது பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படும்.

மலேசியப் பயண ஆவணங்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதிலும் மக்களுக்குத் தரமான சேவையை வழங்குவதிலும் குடிநுழைவுத் துறை எப்போதும் உறுதியுடன் இருப்பதாக அது வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்