தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
சீனாவின் ஹுவாவெய் நிறுவனத்துக்குப் புதிய மைல்கல்

சொந்த இயங்குதளத்தில் முதல் திறன்பேசி அறிமுகம்

1 mins read
1f8137c4-8553-4f67-80a0-f11ae1cafcf3
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள ஹுவாவெய் கடை. - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: சீனக் கைப்பேசித் தயாரிப்பு நிறுவனமான ஹுவாவெய், முழுக்க முழுக்க உள்ளூரில் தயாரிக்கப்பட்ட இயங்குதளம் (OS) கொண்ட அதன் முதல் திறன்பேசியை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 26) அறிமுகம் செய்யவுள்ளது.

பெரும்பான்மை கைப்பேசிகளில் ஆப்பிள் iOS, கூகலின் ஆன்ட்ராய்ட் இயங்குதளங்களே தற்போது பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் ஹுவாவெய் நிறுவனம், இந்த நிலையை மாற்ற முற்படுகிறது. அதன் HarmonyOS Next இயங்குதளத்தில் செயல்படும் ஆகப் புதிய Mate 70 கைப்பேசிகளை ஹுவாவெய் அறிமுகம் செய்கிறது.

ஹுவாவெயின் இணைய விற்பனைத் தளத்தைப் பொறுத்தமட்டில், மூன்று மில்லியனுக்கும் அதிகமான கைப்பேசிகளை வாங்க முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹுவாவெயின் ஷென்ஸென் தலைமையகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்தக் கைப்பேசி அறிமுகம் செய்யப்படும்.

குறிப்புச் சொற்கள்