தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அணுசக்தி பற்றி ஓமானில் ஈரானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை

1 mins read
d0367223-bb16-4e2c-b934-9207f2c48d94
அணுசக்தி ஒப்பந்தத்திற்கு இந்தக் கலந்துரையாடல் வழிவகுக்குமா என்பது குறித்து ஈரான் சந்தேகம் கொள்கிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

துபாய்: ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கு அந்நாடும் அமெரிக்காவும் கலந்துரையாடலில் இணைந்துள்ளன.

ஓமானின் தலைநர் மஸ்கட்டில் ஈரானிய தரப்பினரும் அமெரிக்க தரப்பினரும் சனிக்கிழமையன்று (ஏப்ரல் 12) கூடியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உடன்பாடு எட்டப்படாவிட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சீ, ஈரானிய தரப்பினரையும் திரு டிரம்ப்பின் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காஃப், அமெரிக்கத் தரப்பினரையும் வழிநடத்துகின்றனர்.

அணுசக்தி ஒப்பந்தத்திற்கு இந்தக் கலந்துரையாடல் வழிவகுக்குமா என்பது குறித்து ஈரான் சந்தேகம் கொள்கிறது.

இருபது ஆண்டுகளுக்கு மேலாக நிலவி வரும் இந்த மோதல், சற்றும் தணிந்தபாடில்லை. இந்தக் கலந்துரையாடல் திரு டிரம்ப்பின்படி நேருக்கு நேர் நடைபெறுமா அல்லது ஈரானின் விருப்பப்படி மறைமுகமாக இருக்குமா என்பதும் தற்போது உறுதியாக இல்லை.

பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால் அந்த வட்டாரத்தில் பூசல் பெருமளவில் ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது.

அமெரிக்கத் தாக்குதலுக்கு உடந்தையாக இருந்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கப் படைத்தளங்கள் கொண்டுள்ள தனது அண்டை நாடுகளை ஈரான் எச்சரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்