ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக அறிவித்த ஈரான் வளைகுடா நாடுகள் மீது தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக அறிவித்த ஈரான் வளைகுடா நாடுகள் மீது தாக்குதல்

2 mins read
c36fe7bf-baf1-452e-be37-baa853a5147d
ஈரான் மீது ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலைக் காட்டும் காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: சக்திவாய்ந்த ஏவுகணைகளையும் வானூர்திகளையும் ஏவி அமெரிக்காவும் ஈரானும் தாக்குதலை நடத்தி வரும் வேளையில் வளைகுடா வட்டாரத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களைக் குறிவைத்து நடத்தும் தாக்குதலை டெஹ்ரான் தீவிரமாக்கியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிவிட்டதாகவும் ஈரான் அறிவித்துள்ளது.

இந்தப் புதிய தாக்குதல்கள் கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவும் ஈரானும் கையெழுத்திட்ட இடைக்கால உடன்பாட்டின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி உள்ளன.

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கவும் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போரை முடிவுக்குக் கொண்டுவரவும் அந்த உடன்பாடு இருதரப்பினராலும் கையெழுத்திடப்பட்டது.

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து மீதான கட்டுப்பாட்டை நிலைநிறுத்த ஈரான் முயன்றதன் காரணமாக மீண்டும் தாக்குதல் தொடங்கியுள்ளது.

அமெரிக்காவும் ஈரானும் ஒன்றை ஒன்று தாக்குவது தீவிரமடைந்து வருகிறது.

குறிப்பாக, போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையின் நடுநிலையாளராக இருந்த கத்தார் மீது ஈரான் தாக்குதல் நடத்தி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு கத்தார் மீது ஈரான் நடத்தி இருக்கும் முதல் தாக்குதல் இது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) கத்தார், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், பஹ்ரேன் ஆகிய நாடுகளில் வெடிப்புச் சத்தமும் அபாய ஒலியும் கேட்டதாக செய்தியாளர்கள் சிலரும் உள்ளூர் அதிகாரிகளும் தெரிவித்தனர்.

கடந்த மே மாதம் முதல் ஈரானின் தாக்குதல் இலக்கிற்கு உட்படுத்தப்படாத ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், ஞாயிற்றுக்கிழமை ஈரான் ஏவிய ஏவுகணைகளையும் வானூர்திகளையும் தனது ஆகாயத் தற்காப்புப் படை இடைமறித்து எதிர்கொண்டதாகத் தெரிவித்தது.

கடந்த வாரம் கத்தார் மற்றும் சவூதி அரேபியாவைச் சேர்ந்த மூன்று வர்த்தக எண்ணெய்க் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பதிலடியாக ஈரானியத் தளங்களை அமெரிக்கா தாக்கியது. ஈரானும் விடாப்பிடியாக, வளைகுடா நாடுகளிலுள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது.

தாக்குதல் வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் ஓய்ந்த நிலையில், அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தைகளைத் தொடர ஒப்புக்கொண்டுள்ளதாக அதிபர் டோனல்ட் டிரம்ப் தமது ட்ரூத் சோஷியல் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

குறிப்புச் சொற்கள்