தாக்கப்பட்டால் கடுமையாக எதிர்வினையாற்ற விழையும் ஈரான்

தாக்கப்பட்டால் கடுமையாக எதிர்வினையாற்ற விழையும் ஈரான்

படம்: ராய்ட்டர்ஸ்

01 Oct 2026 - 9:18 pm

1 mins read

துபாய்: அமைதிப் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் குறைந்துகொண்டே போகும் நிலையில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால் அதற்குக் கடுமையான எதிர்வினையாற்ற ஈரான் தயாராகிவருகிறது.

அமைதிப் பேச்சுவார்த்தைகளின் வழியாக பதற்றத்தைத் தணிக்கும் எண்ணம் இருந்தபோதும் அமெரிக்கா அதன் தாக்குதல்களைத் தொடர முடிவெடுத்தால் முன்னெப்போதும் இல்லாத அளவு தக்க பதிலடியை வழங்குவது அவசியம் என ஈரானின் நிலைப்பாடு அமைந்துள்ளது.

அமெரிக்காவுக்கு ராணுவத் தளவாடங்கள் அளித்து ஆதரவு வழங்கும் மத்திய கிழக்கு நாடுகளையும் கடந்து அதன் குறிகளை ஈரான் விரிவாக்கி இலக்குகளை மறுஆய்வு செய்வதாக அந்நாட்டு மூத்த தளபதிகள் தகவல் அளித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ள கடந்த வாரம் நியூயார்க் சென்ற ஈரான் அதிபர் மசூட் பெஸஸ்கியான் நாடு திரும்பியதிலிருந்து ஈரானிய மூத்த அதிகாரிகளும் தளபதிகளும் அமெரிக்க தாக்குதலுக்கு எதிர்வினையாற்றும் திட்டங்களை ஆராய்ந்துவருகின்றனர்.

இறுதி முடிவு எடுக்கப்படாவிட்டாலும் இருதரப்பும் விட்டுக்கொடுக்காமல் உள்ள நிலையில் தாக்குதலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாகிவருவதாக அஞ்சப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஈரானின் அணுவாயுத இலக்குகளை மீண்டும் பெரிய அளவில் குறிவைத்து தாக்குதல் நடத்துவாரா என்பதில் ஈரானியர்கள் தெளிவின்றி உறுதியற்ற நிலையில் உள்ளனர் என்று அனைத்துலக நெருக்கடி நிலைக்கான குழுவின் மூத்த ஆய்வாளர் ஹமிட்ரெட்சா அஸிசி கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
ஈரான் போர்ஈரான்மத்திய கிழக்குஅமெரிக்காடோனல்ட் டிரம்ப்அதிபர்தாக்குதல்ராணுவம்ஆயுதம்ஏவுகணை