ஜெருசலம்: இஸ்ரேலை நோக்கி ஈரான் 180க்கும் மேற்பட்ட ‘பேலிஸ்டிக்’ வகை ஏவுகணைகளைப் பாய்ச்சியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தாக்குதலுக்கான விளைவுகளை ஈரான் சந்திக்கும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உறுதியளித்துள்ளார். அதேவேளை, இஸ்ரேல் பதிலடி தந்தால் அது பேரழிவுக்கு வழிவகுக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
செவ்வாய்க்கிழமையன்று (அக்டோபர் 2) நடத்தப்பட்ட [Ϟ]அந்தத் தாக்குதலில் இஸ்ரேலில் யாரும் காயமுற்றதாகத் தகவல் இல்லை. ஆனால், மேற்குக் கரையில் ஒருவர் கொல்லப்பட்டதாக அதிகாரி[Ϟ]கள் தெரிவித்தனர்.
தாக்குதல் நடந்தபோது இஸ்ரேலியர்கள், வெடிகுண்டுத் தாக்குதல்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் பகுதிகளுக்குத் திரளாகச் சென்று ஒதுங்கினர். நேரடி ஒளிபரப்பின்போது செய்தி[Ϟ]யாளர்கள் பாதுகாப்புக்காகத் தரையில் படுத்துக்கொள்ள வேண்டியிருந்தது.
ஈரான் பாய்ச்சிய ஏவுகணை[Ϟ]களைத் தடுக்க இஸ்ரேலிய ஆகாயத் தற்காப்புக் கருவிகள் செயல்[Ϟ]படுத்தப்பட்டன. அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களும் ஏவுகணைகளைத் தடுத்ததாக அந்நாட்டுத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
வாஷிங்டன், நீண்டகாலமாகத் தனது பங்காளியாக இருந்துவரும் இஸ்ரேலுக்கு முழு ஆதரவு தருவதாகக் கூறியுள்ளது. இந்த விவகாரத்தின் தொடர்பில் இஸ்ரேலுக்கு ஆதரவளிப்போர் தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டால் அந்த வட்டாரத்தில் இருக்கும் அவர்களின் தளங்கள், செயல்[Ϟ]பாடுகள் மீது ஈரான் மோசமான தாக்குதலை நடத்தும் என்று டெஹ்ரான் மிரட்டல் விடுத்துள்ளது.
இதற்கு மேல் யாரும் தங்களைத் தூண்டாதிருந்தால் இஸ்ரேல் மீது தாங்கள் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதல் இதோடு முடிந்தது என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் புதன்கிழமையன்று (அக்டோபர் 2) தெரிவித்தார்.
தாக்குதலைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் விரிவடையக்கூடும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது. பரம எதிரிகளாக இருந்துவரும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் மோசமடையக்கூடும் என்ற கவலை நிலவுவதைத் தொடர்ந்து எண்ணெய் விலை ஐந்து விழுக்காடு கூடியதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
மத்திய கிழக்கு நிலவரம் குறித்து சந்திப்பு நடத்த ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றம் புதன்கிழமையன்று அழைப்பு விடுத்தது.