ஈரான்: ஆர்ப்பாட்டத்தில் ராணுவ வீரரைத் தாக்கிய ஆடவருக்கு மரண தண்டனை

ஈரான்: ஆர்ப்பாட்டத்தில் ராணுவ வீரரைத் தாக்கிய ஆடவருக்கு மரண தண்டனை

1 mins read
f1736652-1b8d-4f17-b9fe-f7f1654fd1d2
23 வயது மெஹ்சேன் ஷேக்கரி எனும் ஆடவர் கைது செய்யப்பட்டு நேற்று வியாழக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. படம்: பிபிசி -

ஈரானில் அரசாங்கத்துக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களின்போது சாலையை மறைத்ததற்காகவும் ராணுவ வீரர் ஒருவரைக் காயப்படுத்தியதற்காகவும் 23 வயது மெஹ்சேன் ஷேக்கரி எனும் ஆடவர் கைது செய்யப்பட்டு நேற்று வியாழக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்நடவடிக்கை அந்நாட்டில் மேலும் பதற்றத்தை அதிகரித்து, கூடுதல் ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவிட்டுள்ளது. அனைத்துலக அளவிலும் இந்த நடவடிக்கைகளுக்குக் கண்டலக் குரல்கள் எழுந்துள்ளன.

அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கும் மேலும் பலருக்கு இதுபோன்ற மரண தண்டனை விதிக்கப்படக்கூடும் என்ற அச்சமும் தலைதூக்கியுள்ளது என்று மனித உரிமை குழுக்கள் தெரிவித்துள்ளன.

ஈரானில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பெண்களுக்கான ஹிஜாப் உடை சட்டத்தை மீறி நடந்ததற்காக 22 வயது மஹ்சா அமினி எனும் 22 வயது பெண் மூன்று மாதங்களுக்கு முன் அந்நாட்டின் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தபோது மர்மமான முறையில் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரானில் பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.