ஈரான் போர் ஆசியா-பசிபிக் வட்டாரத்தில் சீரற்ற தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர்

ஈரான் போர் ஆசியா-பசிபிக் வட்டாரத்தில் சீரற்ற தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர்

1 mins read
e15e04cd-317f-4954-96d2-246486846561
தோக்கியோவில், ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் (இடது), ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மோடேகியைச் சந்தித்தார். - படம்: ஏஎஃப்பி

தோக்கியோ: மத்திய கிழக்கில் நடைபெறும் போர் ஆசியா-பசிபிக் வட்டாரத்தில் சீரற்ற தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 28) தெரிவித்தார். மேலும், உலகளாவிய இடையூறுகளைக் கடந்து செல்ல ஜப்பானுடன் நெருக்கமாகப் பணியாற்றப்போவதாகவும் அவர் உறுதியளித்தார்.

ஜப்பானியப் பிரதமர் சானே தகாய்ச்சி, ஆஸ்திரேலியா மற்றும் வியட்னாமுக்குப் பயணம் மேற்கொள்வதற்குச் சில நாள்களுக்கு முன்பு, தோக்கியோவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமைச்சர் வோங் இவ்வாறு பேசினார்.

மே 1 முதல் 5ஆம் தேதி வரை திருவாட்டி தகாய்ச்சி மேற்கொள்ளும் இப்பயணம், பொருளியல் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் எரிசக்தி மற்றும் முக்கியமான கனிமங்களின் நிலையான விநியோகத்தை உறுதி செய்வதற்கும் எடுக்கப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்று உயர்மட்ட அரசாங்க செய்தித் தொடர்பாளர் மினோரு கிஹாரா தெரிவித்தார்.

தோக்கியோவில், அமைச்சர் வோங் ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மோடேகியைச் சந்தித்தார். மேலும், ஆஸ்திரேலியா, ஜப்பானிடமிருந்து எரிபொருள் இறக்குமதியைப் பெறுவதற்குக் காரணமான இரு நாடுகளுக்கும் இடையிலான மிக நெருக்கமான விநியோகச் சங்கிலிகளை அவர் பாராட்டினார்.

குறிப்புச் சொற்கள்