டெஹ்ரான்: அமெரிக்கா அண்மையில் இருமுறை விதித்த தடைகளுக்கு இடையே ஈரான் குறைந்தபட்சம் 57 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் ஏற்றுமதி செய்ததாக தகவல் வெளிவந்துள்ளது. ‘
ஆகவே தற்போது அமெரிக்கா மீண்டும் அந்நாட்டுக்குத் தடைகள் விதித்துள்ளதால் உலக அளவில் எண்ணெய் சந்தையில் அது எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது யாவரும் உணரக்கூடிய ஒன்றாகும்.
அமெரிக்க அதிபர் திங்கட்கிழமை (ஜூலை 13) ஈரானின் துறைமுகங்களில் கப்பல்கள் சென்றுவர தடை விதித்தார். அதோடு ஹோர்முஸ் நிரிணையைப் பயன்படுத்தும் அனைத்து வர்த்தகக் கப்பல்களும் 20 விழுக்காடு கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் அவர் அறிவித்தார்.
ஈரான் அமெரிக்கா ஆகிய இருநாடுகளும் தற்காலிக அமைதி உடன்பாடை எட்டிய ஒரு மாதத்துக்குள் மீண்டும் சில கப்பல்களை ஈரான் தாக்கியதால் தற்போதைய பூசல் கிளம்பி, தடைகள் குறித்து சமூக ஊடகத்தில் அதிபர் டிரம்பின் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா ஈரான்மீது விதித்த இரண்டு தடைகளுக்கு இடையில் டெஹ்ரான் நாளுக்கு 2.2 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் ஏற்றுமதியைச் செய்துள்ளது. அது மிகப் பெரிய அளவு என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் உண்மையான அளவு குறிப்பிடப்பட்டதைவிட அதிகமாகவே இருக்கும் என்பது பார்வையாளர்களின் கருத்து. ஏனெனில் ஈரான் அதன் எண்ணெய் ஏற்றுமதியின் உண்மை அளவை மறைத்துவிடுவது வழக்கமான ஒன்றாகும்.
அந்த ஏற்றுமதிகள், ஓமன் வளைகுடாவில் உள்ள தடை செய்யப்பட்ட அதன் துறைமுகங்களில் இருந்து மேற்கொள்ளப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.

