ஈரானின் சமயத் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனி பொதுவெளியில் வந்தார்

ஈரானின் சமயத் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனி பொதுவெளியில் வந்தார்

படம்: ராய்ட்டர்ஸ்

06 Jul 2025 - 3:11 pm

1 mins read

துபாய்: ஈரானின் சமயத் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனி இஸ்ரேலுடனான 12 நாள் போருக்குப் பின் முதன்முறையாக டெஹ்ரானில் பொதுவெளியில் சமய நிகழ்ச்சி ஒன்றில் சனிக்கிழமை (ஜூலை 5) கலந்துகொண்டார் என்று அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இமாம் ஹுசேன் மரணமடைந்த ஆண்டுநிறைவு நிகழ்ச்சியில் பள்ளிவாசலில் வழிபாட்டுக்கு வந்தவர்களை சந்தித்தார். இந்த நிகழ்வு ஷியா முஸ்லிம்களுக்கு முக்கிய தினமாகப் பார்க்கப்படுகிறது.

எண்பத்து ஆறு வயது ஆயத்துல்லா தங்களைச் சந்தித்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதை வந்திருந்த மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்பதை அரசாங்க தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி டெஹ்ரானிலுள்ள இமாம் கொமேய்னி பள்ளிவாசலில் நடைபெற்றது. அந்தப் பள்ளிவாசல் ஈரானை இஸ்லாமியக் குடியரசாக நிறுவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 13ஆம் தேதி இஸ்ரேல் ஈரான் மீது அதிரடித் தாக்குதல் நடத்திய நாளிலிருந்து ஆயத்துல்லா அலி காமெனி பொதுவெளியில் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
ஈரான்சமயம்முஸ்லிம்