மலேசியக் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி: அன்வார்

மலேசியக் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி: அன்வார்

1 mins read
f4f00b39-e894-4f68-b3d6-726290d053e5
மலேசியக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைப் பயன்படுத்த அனுமதித்ததற்காக ஈரானுக்கு மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் நன்றி தெரிவித்தார். - படம்: ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: ஹோர்முஸ் நீரிணை வழியாக மலேசியக் கப்பல்கள் தடையின்றிப் பயணிக்க அனுமதி கிடைத்துள்ளதாகப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வியாழக்கிழமை (மார்ச் 26) தெரிவித்துள்ளார்.

ஈரான், எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் மேற்கொண்ட உயர்மட்டப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர், மலேசியக் கப்பல்களை அனுமதித்ததற்காக ஈரான் அதிபருக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.

தற்போது மலேசிய எண்ணெய்க் கப்பல்களையும், அதில் பணியாற்றும் ஊழியர்களையும் விடுவிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவர்கள் விரைவில் நாடு திரும்புவார்கள் என்று அவர் உறுதியளித்தார்.

மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட மலேசியா தொடர்ந்து முயற்சி செய்யும் என்று குறிப்பிட்ட அன்வார், பாதுகாப்பு உத்தரவாதங்கள் தொடர்பான சிக்கல்களால் ஈரான் தயக்கம் காட்டுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

விநியோகத் தடையினால் ஏற்பட்டுள்ள பாதிப்பைச் சமாளிக்க, மானிய விலையிலான எரிபொருள் ஒதுக்கீட்டில் சில மாற்றங்களைச் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. எனினும், பொதுமக்களுக்கான எண்ணெய் விலை மானியம் தொடரும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்