பாக்தாத்: ஈராக்கில் பத்து ஆண்டுகளில் மாநில மன்றங்களுக்கான முதல் தேர்தலுக்கான வாக்குப்பதிவு திங்கட்கிழமை தொடங்கியது.
ஆளும் ஷியைத் முஸ்லிம் கூட்டணியை எதிர்க்கும் மக்கள் ஆதரவு பெற்ற மதகுரு மொக்தாதா அல்-சதர் இத்தேர்தலை புறக்கணித்துள்ள போதிலும் ஆளும்கட்சி தன் அதிகாரத்தை தக்க வைத்துகொள்ளும் என முன்னுரைக்கப்படுகிறது.
இத்தேர்தல் 2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அந்நாட்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஒரு முன்னோட்டமாக கருதப்படுகிறது.
ஈரானில் உள்ளாட்சித் தேர்தல்கள் கடைசியாக 2013ஆம் ஆண்டு நடந்தன. அதற்குப் பிறகு ஈராக்கில் இஸ்லாமிய போராளிகளுக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையே நடந்த போர் காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டன.
ஈராக்கில் இருக்கும் 18 மாநிலங்களில் 15 மாநிலத்திற்கான 285 மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு திங்கட்கிழமை நடைபெற்றது.
மாநில ஆளுநர்களை நியமிப்பது, உள்ளூர் நிர்வாகத்தை மேற்பார்வையிடுவது ஆகியவைத் தேர்ந்தெடுக்கப்படும் மன்ற உறுப்பினர்களின் கடமைகளில் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஈராக்கின் மூன்று மாநிலங்களை உள்ளடக்கிய குர்திஸ்தான் பகுதிக்கு அடுத்த ஆண்டுத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

