தென் லெபனானுக்குத் திரும்ப வேண்டாம்: மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

தென் லெபனானுக்குத் திரும்ப வேண்டாம்: மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

1 mins read
598375b7-2b5a-4228-b993-2e0e8b86c15e
ஏப்ரல் 18ஆம் தேதி, பெய்ரூட்டின் தென் புறநகர்ப் பகுதியில் சேதமடைந்த உடைமைகளைப் பெண்கள் இருவர் ஆய்வு செய்தனர். - படம்: ஏஎஃப்பி

ஜெருசலம்: தென் லெபனானில் உள்ள கிராமங்களுக்கு அந்நாட்டு மக்கள் திரும்ப வேண்டாம் என இஸ்ரேலிய ராணுவம் திங்கட்கிழமை (ஏப்ரல் 20) எச்சரித்துள்ளது. அப்பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்பின் செயல்பாடுகள், கடந்த வாரம் எட்டப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டை மீறுவதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது.

இஸ்ரேல், லெபனான் இடையே ஏப்ரல் 17ஆம் தேதி போர்நிறுத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து, இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கானோர் தென் லெபனானின் சில பகுதிகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.

போர்நிறுத்தம் தொடங்கிய பிறகு, இஸ்ரேலியத் தாக்குதல்களால் மூடப்பட்டிருந்த தென் நகரமான நபடியேவைக் கர்தாலி பகுதியுடன் இணைக்கும் முக்கியச் சாலையை லெபனான் ஆயுதப்படை மீண்டும் திறந்துள்ளது. மேலும், புர்ஜ் ரஹால்-டயர் பாலத்தில் போக்குவரத்தையும் அது ஓரளவுக்குச் சீரமைத்துள்ளது.

மக்கள் கிராமங்களுக்குத் திரும்புவது குறித்து ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த அதிகாரி மஹ்மூட் கமாட்டி முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

போர்நிறுத்தக் காலத்திலும், லெபனானிலிருந்து வரும் எந்தவோர் அச்சுறுத்தலுக்கும் எதிராக ‘முழுப் பலத்தை’ பயன்படுத்த ராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இஸ்ரேலியத் தற்காப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்