விடிய விடிய லெபனான்மீது இஸ்ரேல் தாக்குதல்: 15 பேர் உயிரிழப்பு

விடிய விடிய லெபனான்மீது இஸ்ரேல் தாக்குதல்: 15 பேர் உயிரிழப்பு

1 mins read
486b167b-0510-4af1-8d42-a900911ce03a
லெபனானின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் இரவு முழுவதும் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்

துபாய்: லெபனான்மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 15 பேர் உயிரிழந்ததாக அரச செய்தி நிறுவனம் என்என்ஏ தெரிவித்துள்ளது.

ஆனால், பல்வேறு இடங்களில் உள்ள ஹிஸ்புல்லா கிளர்ச்சிக் குழுவினரைக் குறிவைத்து இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியது.

ஜூன் 18ஆம் தேதி இரவு தொடங்கி ஜூன் 19ஆம் தேதி அதிகாலைவரை நெபாடியே மாவட்டத்தில் உள்ள பல்வேறு நகரங்களில் ஆகாயவழி, வெடிகுண்டுத் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியதாகக் குடியிருப்பாளர்களும் உள்ளூர் ஊடகங்களும் குறிப்பிட்டன.

எனினும், ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் இருந்த பகுதி உட்பட உள்கட்டமைப்புகள்மீதுதான் தாக்குதல் நடத்தியதாகச் சொன்னது இஸ்ரேலிய ராணுவம்.

இஸ்ரேலின் தாக்குதலால் ஈரானுடன் அமெரிக்கா செய்துகொண்ட இடைக்கால உடன்பாடு குறித்த சந்தேகங்கள் எழுந்துள்ளன.

அந்த உடன்பாட்டின்கீழ் லெபனான் உள்ளிட்ட பகுதிகளில் சண்டை நிறுத்தப்படவேண்டும். அனைத்துத் தரப்பும் லெபனானின் எல்லைகளையும் இறையாண்மையையும் மதிக்கவேண்டும் என்றும் உடன்பாடு குறிப்பிட்டது.

இருப்பினும், லெபனானின் தெற்குப் பகுதியிலிருந்து தனது படைகளை மீட்பதற்கான அழைப்பை இஸ்ரேல் நிராகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
லெபனான்உயிரிழப்புஇஸ்‌ரேல்தாக்குதல்