பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா போராளிகளின் கட்டமைப்புகள் வேரூன்றியுள்ளன என்று குற்றஞ்சாட்டி இஸ்ரேல் ராணுவம் அங்கு தாக்குதல் நடத்தியுள்ளது.
மத்திய கிழக்குப் போர் விரிவடையும் சூழலில், லெபானில் இயங்கும் பல்கலைக் கழகங்களின்மீது ஈரான் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஈரானுக்கு ஆதரவாக செயல்படும் ஹிஸ்புல்லா போராளிகள் இயங்கும் தென் லெபனானின் பல கிராமங்களை இஸ்ரேல் ஏற்கெனவே ஆக்கிரமித்துள்ளதோடு அவற்றை முற்றிலும் தரைமட்டமாக்கப் போவதாக மிரட்டி வருகிறது.
தாக்குதல் நடத்தவிருப்பதால், அப்பகுதிகளில் வாழும் மக்களை அங்கிருந்து வெளியேறும்படி இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) அறிவிப்பு விடுத்துள்ளது.

