தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஈரானின் அரசு ஒளிபரப்பைத் தாக்கிய இஸ்ரேல்: மூவர் மரணம்

2 mins read
568e1675-f0a7-4c23-a87b-4a90d7239c30
ஈரானின் இரின் செய்தி ஒளிபரப்பானபோது தாக்குதல் நடந்ததில் செய்திப் படைப்பாளர் அங்கிருந்து பதற்றத்துடன் வெளியேறினார். - படம்: ஏஎஃப்பி

டெல் அவிவ்/ துபாய் - ஈரானின் அரசாங்க ஒளிபரப்பு நிறுவனத்தின்மீது இஸ்ரேல் திங்கட்கிழமை (ஜூன் 16) தாக்குதல் நடத்தியுள்ளது.

அதில் மூவர் மாண்டதாக ஈரானின் அரசாங்க ஊடகங்கள் தெரிவித்தன. இதற்குமுன், செய்தி ஆசிரியர் ஒருவரும் இரண்டு ஊழியர்களும் தாக்குதலில் மாண்டதாக ஊடகங்கள் கூறின.

தாக்குதல் நடந்தபோது செய்திப் படைப்பாளர் ஒருவர் பதற்றத்துடன் தமது இருக்கையைவிட்டு செல்வதைக் காட்டும் காணொளிகள் இணையத்தில் பரவி வருகின்றன.

ஈரானின் அரசாங்க செய்தி நிறுவனமும் அந்தத் தாக்குதல் குறித்து செய்தி வெளியிட்டது. தாக்கப்பட்ட கட்டடத்தை ஈரானின் ஆயுதப் படைகள் தகவல் நிலையமாகப் பயன்படுத்துவதாக இஸ்ரேலிய ராணுவம் குறிப்பிட்டது.

சண்டைநிறுத்தத்தை அமல்படுத்த உதவும்படி அமெரிக்காவுக்கு ஈரான் அழைப்பு விடுத்தபோதும் இஸ்ரேலின் ஆகாயப் படைகள் மீது ஈரான் எண்ணற்ற ஏவுகணை தாக்குதல்களைத் தொடுத்தது. இஸ்ரேலும் அதன் ஏவுகணை தாக்குதல்களைக் கைவிடுவதாகத் தெரியவில்லை.

“இஸ்ரேல் அதன் அனைத்து தாக்குதல்களையும் நிறுத்தவேண்டும். எங்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும். இல்லாவிட்டால் எங்கள் பதிலடி தொடரும். நெட்டன்யாஹுவை அடக்க அமெரிக்காவுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு போதும்,” என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டார்.

திரு டிரம்ப் ஒருவேளை பேச விரும்பினால் அதற்கு இணங்குவாரா என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவிடம் கேட்டதற்கு “அணுவாயுதங்கள், நீண்ட தூரம் பாயக்கூடிய ஏவுகளைகள் ஆகிய இரண்டு அச்சுறுத்தல்களையும் நீக்குவதில் இஸ்ரேல் உறுதியுடன் இருக்கிறது,” என்றார்.

அதை வேறு வழியில் சாதிக்க முடியும் என்றால் அதற்கு ஒப்புக்கொள்வதற்காகக் கூறிய திரு நெட்டன்யாஹு அதற்கு 60 நாள் வாய்ப்பு கொடுக்கப்பட்டதாகச் சொன்னார்.

ஜூன் 15ஆம் தேதி இஸ்ரேல் தாக்குதலின் முதல் நாளில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய திரு டிரம்ப், யுரேனிய உற்பத்தியை நிறுத்துவதற்கான உடன்பாட்டை எட்ட ஈரானியர்களுக்கு 60 நாள்கள் அவகாசம் கொடுத்ததாக சொன்னார். ஆனால் உடன்பாடு எட்டப்படாமல் அது காலவதியாகிவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் நடைபெறவிருந்த கலந்துரையாடல் கைவிடப்பட்டது. தாக்கப்படும்போது சமரசம் பேச முடியாது என்று ஈரான் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்