ஜெருசலம்: ஏமனிலிருந்து பாய்ச்சப்பட்ட ஏவுகணையை தடுத்து நிறுத்தியதாக ஞாயிற்றுக் கிழமை (ஜனவரி 5) அன்று இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது.
இது, ஏமன் நடத்தி வரும் தொடர் தாக்குதலின் ஒரு பகுதி என்று சொல்லப்படுகிறது.
“ஏவுகணை பாய்வதற்கு முன்பு டல்மெய் இலாஸாரில் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது. ஏமனி லிருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேலிய எல்லையைக் கடப்பதற்கு முன்பு இடைமறித்துத் தடுக்கப்பட்டது,” என்று இன்ஸ்டகிராமில் வெளியிட்ட பதிவில் இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது.
வெள்ளிக்கிழமை அன்றும் ஏமனிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணையையும் ஆளில்லா வானூர்தியையும் சுட்டு வீழ்த்தியதாக ராணுவம் கூறியிருந்தது.
கடந்த நவம்பர் மாதம் இஸ்ரேலுக்கும் ஈரான் ஆதரவு போராளிக் குழுவான ஹிஸ்புல்லாவுக்கும் சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. அப்போதிலிருந்து ஏமனில் செயல்படும் மற்றொரு ஈரான் ஆதரவு கிளர்ச்சிக்காரர்கள், இஸ்ரேல் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கின்றனர்.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதிக்குப் பிறகு ஹமாசைத் தொடர்ந்து ஹிஸ்புல்லாவும் இஸ்ரேலைத் தாக்கி வந்தது.
இந்நிலையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக தன்னிச்சையாக செயல்படுவதாகக் கூறியுள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் காஸாவில் சண்டை நிறுத்தம் ஏற்படும் வரை இஸ்ரேலைத் தொடர்ந்து தாக்கப்போவதாக சூளுரைத்தனர்.
ஏமனிலிருந்து ஏவப்பட்ட பெரும்பாலான ஏவுகணைகள், வானூர்திகள் இடைமறிக்கப்பட்டன. கடந்த டிசம்பரில் டெல் அவிவில் ஒரு ஏவுகணையால் 16 பேர் காயம் அடைந்தனர் என்று இஸ்ரேலிய ராணுவம் மற்றும் அவசரகால சேவை அமைப்பு கூறியது.
தொடர்புடைய செய்திகள்
இதற்குப் பதிலடியாக இஸ்ரேலிய ஆகாயப் படை, சானா அனைத்துலக விமான நிலையம் உட்பட ஏமனில் உள்ள ஹூதி இலக்குகைளத் தாக்கியது.