பெய்ரூட்டின் தென்பகுதியில் புதிய தாக்குதல்களைத் தொடுத்தது இஸ்ரேல்

பெய்ரூட்டின் தென்பகுதியில் புதிய தாக்குதல்களைத் தொடுத்தது இஸ்ரேல்

1 mins read
3a4d8ae5-c38d-41a3-ab92-1bb61d62037f
செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) பின்னேரம் தென்பெய்ரூட்டின் புறநகர்ப் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சேதமுற்ற கட்டடத்திலிருந்து மேலெழுந்த நெருப்பு. - படம்: ஏஎஃப்பி

பெய்ரூட்: இஸ்ரேல், பெய்ரூட்டின் தென்பகுதியில் புதன்கிழமை (மார்ச் 11) புதிய தாக்குதல்களைத் தொடுத்துள்ளது.

லெபானின் அரசாங்க ஊடகம் அந்தத் தகவலை வெளியிட்டது. ஈரானின் ஆதரவுடன் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைத்ததாக இஸ்ரேல் கூறியது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதல்களில் ஈரானின் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி கொல்லப்பட்டார். அதற்குப் பதிலடியாக இஸ்ரேலைத் தாக்கியது ஹிஸ்புல்லா. அதனைத் தொடர்ந்து, மத்திய கிழக்குப் போருக்குள் லெபனானும் சிக்கியது.

இஸ்ரேல், ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தாக்குதலை முடுக்கிவிட்டது. 2024ஆம் ஆண்டு இரு தரப்பும் சண்டை நிறுத்தம் செய்துகொள்ள இணங்கியிருந்த நிலையில் தற்போது சண்டை நடைபெறுகிறது.

இதற்கிடையே, லெபனான் முழுதும் இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. எல்லைப் பகுதிகளில் தரைப் படையினரையும் அது அனுப்பியிருக்கிறது.

தென்பெய்ரூட்டின் புறநகர்ப் பகுதிகளில் இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தியதாக லெபனானின் அரசாங்க ஊடகம் தெரிவித்தது. கட்டடங்களிலிருந்து தீ கொழுந்துவிட்டு எரிவதைப் படங்களில் பார்க்கமுடிந்தது.

அந்த வட்டாரத்தில் உள்ள ஹி‌ஸ்புல்லாவின் உள்கட்டமைப்புகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது.

இவ்வேளையில், லெபனானின் தென்புற எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கியாம், ஒடேசே நகரங்களில் இஸ்ரேலியப் படையினரைத் தாக்கியதாக ஹிஸ்புல்லா கூறியது. இஸ்ரேல்மீது ஏவுகணைகளைப் பாய்ச்சியதாகவும் அது சொன்னது.

குறிப்புச் சொற்கள்