இஸ்ரேல், லெபனான் பேச்சுவார்த்தை அமைதிக்கு வழிவகுக்கும்: அமெரிக்கா

இஸ்ரேல், லெபனான் பேச்சுவார்த்தை அமைதிக்கு வழிவகுக்கும்: அமெரிக்கா

1 mins read
மத்திய கிழக்கில் சண்டைநிறுத்தம் எந்நேரமும் மீறப்படலாம் என்ற சூழலில் இஸ்ரேல், லெபனான் பேச்சுவார்த்தை அமெரிக்காவில் நடந்துள்ளது
200c2d77-8ae1-4348-b5c7-89b1dcbd10ed
வெளியுறவு அமைச்சில் நடந்த சந்திப்புக்குப் பிறகு, அமெரிக்க, இஸ்ரேலிய, லெபனானியத் தூதரக அதிகாரிகளுடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ (இடமிருந்து மூன்றாவது). - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: இஸ்ரேலிய, லெபனானிய அதிகாரிகள், அமெரிக்கத் தலைநகரில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) அமைதிக்கான சந்திப்புக் கூட்டத்தை நடத்தியுள்ளனர்.

வரலாற்றுபூர்வமான அச்சந்திப்பு, அமைதிக்கான வரைமுறைகளை வகுக்கும் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ தெரிவித்தார்.

கடந்த 1983ஆம் ஆண்டுமுதல் இருநாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட பூசலுக்குப் பிறகு, அவை சந்திப்பது இதுவே முதன்முறையாகும். ஈரானின் ஆதரவுபெற்ற ஹிஸ்புல்லா போராளிகள், லெபனானைவிட்டு வெளியேறவேண்டும் என்று இஸ்ரேல் வலியுறுத்தி வருகிறது.

அதேசமயம், அண்மையில் நடந்த அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் லெபனானில் உள்ள நிலவரமும் உள்ளடங்கவேண்டும் என்று ஈரான் நிபந்தனை விதித்தது.

மத்திய கிழக்கில் அமெரிக்கா, ஈரானுக்கு இடையிலான தற்போதைய சண்டைநிறுத்தம் எந்நேரமும் மீறப்படலாம் என்ற பதற்றமான சூழலில், இஸ்ரேல், லெபனான் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

இருப்பினும், அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரும் மூத்த அரசதந்திரியுமான மார்க்கோ ரூபியோவின் தலைமையில் கூட்டம் நடந்துள்ளதால், முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்