வாஷிங்டன்: இஸ்ரேல், கத்தார், அமெரிக்கா மூன்றும் நியூயார்க் நகரில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 7) ரகசியமாக முத்தரப்புச் சந்திப்பு நடத்தியதாகத் தகவல் தெரிந்தவர்கள் அமெரிக்காவின் அக்சியோஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.
இதற்குச் சில மாதங்களுக்கு முன்புதான் ஹமாஸ் அமைப்புத் தலைவர்களைக் குறிவைத்து இஸ்ரேலிய போர் விமானங்கள், கத்தார் தலைநகர் டோஹாவில் ஆகாயத் தாக்குதல் நடத்தின.
இது, காஸா போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்ட பிறகு மூன்று நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற ஆக உயரிய சந்திப்பு என்று தகவல் தெரிந்த இருவர் அக்சியோசிடம் தெரிவித்தனர்.
கத்தார்தான், காஸா போரில் சமரசப் பேச்சு நடத்திய முக்கியத் தரப்பாகும்.
சந்திப்பு நடந்ததை வெள்ளை மாளிகை உடனடியாக ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தவில்லை.
அமெரிக்கத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப் சந்திப்புக்குத் தலைமை தாங்கியதாக அக்சியோஸ் தெரிவித்தது.
இஸ்ரேலைப் பிரதிநிதித்து மொசாட் உளவு அமைப்பின் தலைவர் டேவிட் பார்னியா, பெயர் தெரிவிக்கப்படாத கத்தார் நாட்டு அதிகாரி ஒருவர் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டதாக அக்சியோஸ் குறிப்பிட்டது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே முழுமையான போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்ட எகிப்து, அமெரிக்காவுடன் சேர்ந்து கத்தார் வரைந்தது.
தொடர்புடைய செய்திகள்
அந்தப் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல், ஹமாஸ் இரண்டும் ஒன்று மற்றொன்றின் மீது குற்றஞ்சாட்டி வருகின்றன.

