போப் மரணத்துக்கு அனுதாபம் தெரிவித்து, பிறகு பதிவை நீக்கிய இஸ்‌ரேல்

1 mins read
777b2c38-a9f9-4ca1-b424-a12f41c466e3
ஜெருசலத்தில் உள்ள தேவாலயத்தில் போப் ஃபிரான்சிசுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஜெருசலம்: போப் ஃபிரான்சிஸ் காலமானதை அடுத்து, இஸ்‌ரேலிய அரசாங்கம் அனுதாபம் தெரிவித்துக்கொண்டது.

இதுகுறித்து அது சமூக ஊடகத்தில் பதிவிட்டது.

ஆனால், பிறகு அப்பதிவை அது நீக்கியது.

காஸா போரை எதிர்த்து போன்ப் ஃபிரான்சிஸ் வெளியிட்ட கருத்துகள் இதற்குக் காரணம் என்று அறியப்படுகிறது.

போப் ஃபிரான்சிஸ் திங்கட்கிழமை (ஏப்ரல் 21) காலமானார்.

அவருக்கு 88 வயது.

காஸா மீது இஸ்‌ரேல் நடத்தும் தாக்குதல் இனப் படுகொலைக்கு ஈடாகுமா என்பதை அனைத்துலகச் சமூகம் ஆராய வேண்டும் என்று 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் போப் ஃபிரான்சிஸ் கருத்து தெரிவித்திருந்தார்.

காஸா மீது இஸ்‌ரேல் நடத்திய தாக்குதலுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

போப் ஃபிரான்சிஸ் தெரிவித்த இக்கருத்துகள் நியாயமற்றவை என்று இஸ்‌ரேல் கூறியது.

போப் பிரான்சிசின் மரணம் குறித்து இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு கருத்து தெரிவிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்