தெற்கு பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல்

தெற்கு பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 mins read
64ecc6cd-6b32-4e84-8302-765e4b74d348
பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் நடத்தப்பட்டதாக நம்பப்படும் தாக்குதலையடுத்து காணப்பட்ட புகை. - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

பெய்ருட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தஹியே குடியிருப்புப் பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தத் தொடங்கிவிட்டதாக இஸ்ரேலிய ராணுவம் வியாழக்கிழமை (மார்ச் 5) தெரிவித்தது.

பலவந்தமாக வன்முறையில் ஈடுபடும் இஸ்ரேலின் போக்கிற்குப் பதிலடி தரப்படாமல் போகாது என்று ஹிஸ்புல்லா குறிப்பிட்டிருந்தது.

லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பு, அந்நாட்டுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே உள்ள எல்லைப் பகுதிக்கு அருகே உள்ள இடங்களிலிருந்து வெளியேறுமாறு அங்கிருக்கும் இஸ்ரேலியர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

எல்லையைச் சுற்றியுள்ள ஐந்து கிலோமீட்டர் சுற்று வட்டாரப் பகுதியில் இருப்போருக்கு இது பொருந்தும். டெலிகிராம் செயலிவழி வெள்ளிக்கிழமை (மார்ச் 6) காலை ஹீப்ரூ மொழியில் ஹிஸ்புல்லா இந்த எச்சரிக்கையை விடுத்தது.

இதற்கு முதல் நாள், லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப் பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து பெய்ரூட்டில் உள்ள தஹியே எனும் பகுதியிலிருந்து பெரிய அளவில் மக்கள் வெளியேற நேரிட்டது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போரில் லெபனானும் இப்போது ஈடுபட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை (மார்ச் 2) லெபனானும் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இஸ்ரேல், பெய்ரூட்டின் மேற்குப் பகுதி மற்றும் லெபனானின் தெற்கு, கிழக்குப் பகுதிகள் மீது ஆகாயப் படைத் தாக்குதல்களை நடத்தியது.

எல்லைப் பகுதிகளில் உள்ள நகரங்களிலிருந்து மக்களை வெளியேற்றப்போவதில்லை என்று இஸ்ரேல் கூறியுள்ளது. லெபனானுக்குள் கூடுதல் ராணுவ வீரர்களை அனுப்பியுள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்தது.

இது, அருகில் வாழும் தமது மக்களைப் பாதுகாப்பதற்கான தற்காப்பு நடவடிக்கை என்று இஸ்ரேல் குறிப்பிட்டது.

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய ஆகாயப் படைத் தாக்குதல்களில் குறைந்தது 123 பேர் கொல்லப்பட்டுவிட்டதாக லெபனான் சுகாதார அமைச்சு கூறியது.

குறிப்புச் சொற்கள்