மலேசியாவில் இஸ்ரேலிய ஆடவர் கைது

ஆறு கைத்துப்பாக்கிகள் பறிமுதல்

மலேசியாவில் இஸ்ரேலிய ஆடவர் கைது

1 mins read
e8ac16a8-b927-4987-bbb2-9286a97dd30d
மாதிரிப்படம்: - பிக்சாபே

கோலாலம்பூர்: துப்பாக்கிகள் வைத்திருந்த இஸ்ரேலிய ஆடவர் ஒருவரை மலேசியக் காவல்துறை புதன்கிழமையன்று (மார்ச் 27) கைதுசெய்தது.

கோலாலம்பூரின் ஜாலான் அம்பாங்கில் உள்ள ஒரு ஹோட்டலில் அவர் கைதுசெய்யப்பட்டார்.

பிரெஞ்சுக் கடப்பிதழைப் பயன்படுத்தி மலேசியாவிற்குள் நுழைந்த அவரிடமிருந்து ஆறு கைத்துப்பாக்கிகளும் 200 குண்டுகளும் கைப்பற்றப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

அந்த 36 வயது ஆடவர் இஸ்ரேலியக் கடப்பிதழையும் வைத்திருந்ததாகவும் பின்னர் அவர் அதனை ஒப்படைத்துவிட்டதாகவும் காவல்துறைத் தலைமை ஆய்வாளர் ரஸருதீன் ஹுசைன் கூறினார்.

“குடும்பத் தகராறு காரணமாக சக இஸ்ரேலியர் ஒருவரைத் தேடிக் கொல்வதற்காக மலேசியாவிற்குள் நுழைந்ததாக அந்த ஆடவர் கூறினார்,” என்று வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் திரு ஹுசைன் தெரிவித்தார்.

அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளில் மூன்றில் குண்டு நிரப்பப்பட்டிருந்ததாகவும் திரு ஹுசைன் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்