இஸ்‌ரேலிய அதிகாரி: காஸா உடன்படிக்கைக்கு ஹமாஸ் பச்சைக்கொடி காட்டிவிட்டது

1 mins read
a27ba010-6eb7-4bd0-a16e-eb44aed0fb05
ஹமாஸ் அமைப்பு பிடித்துவைத்துள்ள பிணைக்கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. - படம்: ஏஎஃப்பி

ஜெருசலம்: காஸா போர் நிறுத்த உடன்படிக்கையில் கையெழுத்திட ஹமாஸ் அமைப்பு இணக்கம் தெரிவித்துவிட்டதாக இஸ்‌ரேலிய அதிகாரி ஒருவர் புதன்கிழமையன்று (ஜனவரி 15) தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாகப் பேச்சுவார்த்தையை நடத்திய கத்தார் நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் முன்வைத்த பரிந்துரையை ஹமாஸ் ஏற்றுக்கொண்டதாக அந்த அதிகாரி கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
ஹமாஸ்இஸ்‌ரேல்கத்தார்