தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வட லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 mins read
3356bc09-c2bd-4450-8778-555caaf40b52
திரிப்போலியில் நடத்தப்பட்ட இஸ்ரேலியத் தாக்குதலில் சேதமுற்ற வாகனங்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ரூட்: இஸ்ரேல் சனிக்கிழமை (அக்டோபர் 5) முதன்[Ϟ]முறையாக லெபனானின் வடக்கு நகரான திரிப்போலி மீது தாக்குதல் நடத்தியதாக லெபனானிய பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.

திரிப்போலியில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் அதிகாரி ஒருவரும் அவரின் மனைவி, இரு பிள்ளைகளும் கொல்லப்பட்டதாக அந்தத் தரப்பு ராய்ட்டர்சிடம் கூறியது.

ஹமாசின் ஆயுதமேந்திய ராணுவப் பிரிவுத் தலைவர்களில் ஒருவரான சையது அத்தல்லா இதில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்புடன் தொடர்புடைய ஊடகம் ஒன்று தெரிவித்தது.

திரிப்போலி மீதான தாக்குதல் குறித்து இஸ்ரேலிய ராணுவம் உடனடியாக கருத்து எதுவும் கூறவில்லை.

ஹிஸ்புல்லாவின் உளவுத்துறை தலைமையகம் மீது இஸ்ரேல் குறிவைப்பு

இதற்கிடையே, லெபனானியத் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லாவின் உளவுத்துறை தலைமையகத்தை தான் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியுள்ளது. அதற்கு ஏற்பட்டுள்ள சேதத்தை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) தான் மதிப்பீடு செய்ததாக இஸ்ரேல் சொன்னது.

அக்டோபர் 1ஆம் தேதி ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்கு[Ϟ]தலுக்குப் பதிலடி தருவதில் தன்னிடம் உள்ள தெரிவுகள் குறித்து இஸ்ரேல் பரிசீலித்து வருகிறது. லெபனானில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

லெபனானில் ஹிஸ்புல்லா போராளிகளைப் பின்னுக்குத் தள்ளுவதிலும் காஸாவில் ஹமாஸ் அமைப்பினரை நீக்கு[Ϟ]வதிலும் இஸ்ரேல் தனது இலக்குகளை எட்ட முயன்று வரும் வேளையில், ஈரான் எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் நிலவுவதால் எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளன.

அண்மையில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் சையது ஹசன் நஸ்ரல்லாவின் உறவினரும் அவரின் இடத்தை நிரப்பவிருந்ததாக நம்பப்படுபவருமான ஹாஷிம் சஃபிதீனைக் குறிவைக்கும் நோக்கில் அந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் ஹாஷிமின் நிலை என்னவானது என்பது பற்றித் தெரியவில்லை. இதுகுறித்து இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் கருத்து கூறவில்லை.

குறிப்புச் சொற்கள்